உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஜி.எஸ்.டி., வரியில் உரிய பங்கை கேட்க பழனிசாமிக்கு திராணி இருக்கிறதா? மஸ்தான் எம்.எல்.ஏ., பேச்சு

ஜி.எஸ்.டி., வரியில் உரிய பங்கை கேட்க பழனிசாமிக்கு திராணி இருக்கிறதா? மஸ்தான் எம்.எல்.ஏ., பேச்சு

செஞ்சி : ஜி.எஸ்.டி., வரியில் தமிழகத்திற்கு உரிய பங்கை தரவேண்டும் என மோடியிடம் கேட்க பழனிசாமிக்கு திராணி இருக்கிறதா என மஸ்தான் எம்.எல்.ஏ., பேசினார். செஞ்சியில் நடந்த தி.மு.க., சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: முதல்வர் ஸ்டாலின் பாரதியின் புதுமை பெண் கனவை நனவாக்கி புதுமை பெண் திட்டம் கொண்டு வந்துள்ளார். செஞ்சியில் கல்லுாரி கொண்டு வந்து பெண்கள் படிக்க வழி செய்துள்ளார். திண்டிவனம் சிப்காட்டில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். விபத்தில் காயமடைந்தவரை மருத்துவமனையில் சேர்த்தால் 5000 ரூபாய் வழங்கப்படும் என்ற திட்டத்தில் இதுவரை 1 லட்சம் பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிர் பிழைத்துள்ளனர். பிரதமர் மோடி தமிகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்க மறுக்கிறார். தமிழகத்தின் உரிமைகளை பறிக்கிறார். கல்வியிலும், சுகாதாரத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இது மோடிக்கு இது பிடிக்க வில்லை. தமிழகத்தை வஞ்சிக்கிறார். திட்டங்களுக்கு நிதி ஒதுக்க மறுக்கிறார். ரயில்வே, சாலை வசதிக்கு நிதி வழங்க வில்லை. அப்படிபட்ட மோடிக்கு, பழனிசாமி ஜால்ரா போடுவதுடன், அவருடன் கூட்டணி வைக்கிறார். அம்பானி, அதானியின் 16 ஆயிரம் கோடி ரூபாய் கடனை ரத்து செய்த மோடி, விவசாயிகளின் கடனை ரத்து செய்யவில்லை. நான் ஒரு விவசாயி என கூறி வரும் பழனிசாமி மோடிக்கு வக்காலத்து வாங்குகிறார். ஜி.எஸ்.டி., வரியில் தமிழகத்திற்கு உரிய பங்கை தர வேண்டும், நீட்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மோடியிடம் கேட்பதற்கு பழனிசாமிக்கு திராணி இருக்கிறதா. 7 ஆண்டுகளுக்கு முன் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி வழங்காமல் கிடப்பில் போட்டு தமிழகத்தை வஞ்சிக்கும் மோடியுடன் கைகோர்த்துள்ளார். மகளிர் உரிமை தொகை விடுபட்டவர்களுக்கு உரிமை தொகை வழங்குவதற்காக உங்களுடன் ஸ்டாலின் திட்டம் கொண்டு வந்துள்ளார். விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும். தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பமும் முதல்வர் ஸ்டாலினின் ஏதாவது ஒரு திட்டம் மூலம் பயனடைந்திருக்கிறது. இவ்வாறு மஸ்தான் எம்.எல்.ஏ., பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி