உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மக்கள் சொந்த செலவில் வடிகால் வாய்க்கால் சீரமைப்பு

மக்கள் சொந்த செலவில் வடிகால் வாய்க்கால் சீரமைப்பு

திண்டிவனம்: அரசு அதிகாரிகள் கைவிட்டதால், பொதுமக்கள் தங்கள் சொந்த செலவில் வடிகால் வாய்க்காலை சீரமைத்தனர். திண்டிவனத்திலுள்ள காந்திநகர், வகாப்நகர் பகுதி மக்கள், அதிக அளவில் மழை, வெள்ளம் வரும் சமயத்தில் பாதிக்கப்படுவது வழக்கமாக நடக்கிறது. இந்த சமயத்தில் வீடுகளில் மழை நீர் சூழ்ந்து கொண்டு, அங்கு வசிக்கும் மக்களை பாதிப்படைய செய்யும். காவேரிப்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேறும் வெள்ள உபரி நீர் அனைத்தும் வடிகால் வாய்க்கால் இல்லாததால், குடியருப்பு பகுதியான காந்திநகர், வகாப்நகரில் புகுந்து சேதத்தை ஏற்படுத்தவிடும். இந்த பிரச்னை குறித்து, நகர்மன்ற தலைவர் நிர்மலாரவிச்சந்திரன், எம்.எல்.ஏ. ,அர்ஜூனன் உள்ளிட்டவர்களை பொதுமக்கள் சந்தித்து, காவேரிப்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீர் நத்தமேடு, வீராங்குளம் பகுதி வடிகால் வாய்க்காலில் சேரும் வகையில், தனியாக வாய்க்கால் கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தும், எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து காந்திநகர், வகாப்நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் சொந்த செலவில், பொக்லைன் வைத்து, காவேரிப்பாக்கம் ஏரிப்பகுதியிலிருந்து வெளியேறும் உபரி நீர் செல்லும் தற்காலிக வாய்க்காலை துார்வாரி, ஆழப்படுத்தி சீர் செய்தனர். நகராட்சி நிர்வாகம் காவேரிப்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் செல்லும் வகையில், நிரந்தரமாக வடிகால் வாய்க்கால் கட்டித்தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ