உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  மொபைல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல்; டிரைவர் கைது

 மொபைல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல்; டிரைவர் கைது

செஞ்சி: செஞ்சி அருகே மொபைல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த கொங்கரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் பால முருகன், 35: டிரைவர். இவரது மனைவி மாலதி, 32; இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். பாலமுருகனுக்கு குடிப்பழக்கம் இருப்பதால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் 9 மாதங்களுக்கு முன்பு மாலதி குழந்தைகளுடன் சென்னை சென்று தனியாக வசித்து வருகின்றார். நே ற்று மாலை 5.30 மணியளவில் பாலமுருகன் வல்லம் மெயின் ரோட்டில் உள்ள 135 அடி உயரம் உள்ள தனியார் மொ பைல்போ ன் டவர் மீது ஏறி, மனைவி, குழந்தைகளை அழைத்து வந்தால் தான் இறங்குவேன். இல்லை எனில் கீழே விழுத்து தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டினார். சம்பவ இடத்தில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். அங்கு வந்த செஞ்சி இன்ஸ்பெக்டர் விநாயக முருகன் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் நீண்ட நேரம் சமாதானம் பேசி, பாலமுருகனை மாலை 6.30 மணிக்கு மொபைல்போன் டவரில் இருந்து கீழே இறங்க வைத்தனர். பின்னர் பாலமுருகனை செஞ்சி போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்றனர். இச்சம்பவத்தால் வல்லம் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ