உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு

அரசு பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு

விழுப்புரம் விழுப்புரம் நகராட்சி உயர்நிலை பள்ளியில், போக்குவரத்து போலீஸ் மற்றும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில், போதை பொருள் ஒழிப்பு மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தன் தலைமை தாங்கினார். இந்திய மருத்துவ சங்க கிளை செயலர் திருமாவளவன், போக்குவரத்து சப்இன்ஸ்பெக்டர் குமாரராஜா, சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரன் கலந்துகொண்டு, போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், போதை பொருள் பயன்பாட்டை தடுக்க தங்கள் உறவினர்கள், நண்பர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், விபத்துகளை தவிர்க்க போக்குவரத்து விதிகளை பின்பற்றி வாகனங்களை இயக்க வேண்டும் என பேசினர். தொடர்ந்து, போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர். ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை