உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

விழுப்புரம்: கண்டம்பாக்கம் ஊராட்சியில், அரசு பள்ளி மாணவர்கள் சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.விழுப்புரம் அடுத்தகண்டம்பாக்கம் ஊராட்சியில், விழுப்புரம் காமராஜ் நகராட்சி மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ்., மாணவர்கள் சிறப்பு முகாம் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.மாணவர்கள் பேரணியை ஊராட்சி மன்ற தலைவர் தனசேகரன் துவக்கி வைத்தார். பள்ளி என்.சி.சி., அலுவலர் ரத்தினமணி முன்னிலை வகித்தார்.திட்ட அலுவலர் ராஜசேகரன், போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு வாசகங்களை வாசித்திட, பதாகை ஏந்திய மாணவர்கள் கோஷமிட்டபடி சென்றனர். முக்கிய வீதிகள் வழியாக மாணவர்கள் பேரணியாக சென்றனர்.ஊராட்சி மன்ற துணை தலைவர் சபரிநாதன் மற்றும் ஊர் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ