உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில், போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.போதை பொருள் நுண்ணறிவு பிரிவு சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் சுஜாதா தலைமை தாங்கினார். சமூக நீதி ஆர்வலர் சின்னையா, பள்ளி தலைமை ஆசிரியர் முருகன் ஆகியோர் போதை பொருள் விழிப்புணர்வு சம்பந்தமாக மாணவர்களிடம் கூறினர். தொடர்ந்து, விழிப்புணர்வு சம்பந்தமாக பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டு, உறுதிமொழி ஏற்கப்பட்டது. பேச்சு போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. போதை பொருள் நுண்ணறிவு பிரிவு சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் மலரவன் உட்பட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை