மேலும் செய்திகள்
உழவர் சேவை மைய பட்டதாரிகளுக்கு பயிற்சி
06-Dec-2025
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் பராமரிப்பு காரணங்களால் இ-சேவை மையங்கள் இரு தினங்களுக்கு இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மூலம் நடத்தப்படும், அனைத்து அரசு இ--சேவை மையங்கள் மற்றும் ஆதார் சேர்க்கை மையங்களில், மென்பொருள் பராமரிப்பு மற்றும் தணிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அரசு கேபிள் டி.வி. நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில், டிச.31 புதன்கிழமை) மற்றும் ஜன.1ம் தேதி வியாழக்கிழமை ஆகிய இரண்டு நாட்களுக்கு, இ-சேவை மையங்கள் செயல்படாது என்று, பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மையங்கள் ஜன.2 முதல் வழக்கம் போல் தொடர்ந்து செயல்படும். பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
06-Dec-2025