உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இ.கம்யூ.,ஆர்ப்பாட்டம்  

இ.கம்யூ.,ஆர்ப்பாட்டம்  

அவலுார்பேட்டை; இ.கம்யூ., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேல்மலையனுார் தாசில்தார் அலுவலகம் எதிரில் நேற்று மாலையில் இ.கம்யூ., சார்பில் தாலுகாவில் உள்ள அனைத்து மாற்று திறனாளிகளுக்கும் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்குதல், உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெற்ற மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். வட்ட துணை செயலாளர்கள் அமீர்ஜான், செந்தில்குமார் , பொருளாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சவுரி ராஜன், மாவட்ட துணை செயலாளர் முருகன், பொருளாளர் பாலசுப்ரமணி ஆகியோர் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !