கல்வி நடைமுறையாளர்கள் கூட்டம்
வானூர் : ஆரோவில்லில், 5வது ஒருங்கிணைந்த கல்வி நடைமுறையாளர்கள் கூட்டம் நடந்தது. இதில் குழந்தைகளின் டிஜிட்டல் அடிமைத்தனம், உடல் வளர்ச்சி மற்றும் படைப்பாற்றல் வளர்ச்சி போன்ற சவால்களைக் கையாள்வது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது. அரவிந்தர் சர்வதேச கல்வி ஆராய்ச்சி நிறுவனம் ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில், 150க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் கலந்து கொண்டனர்.கல்வியாளர்கள், பெற்றோர் மொபைல் போன்களை டிஜிட்டல் குழந்தைப் பராமரிப்பாளர்களாக பயன்படுத்துவதால், அவர்களின் கவனம், சமூகத் திறன் மற்றும் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதை வலியுறுத்தினர்.கூட்டத்தில், டிஜிட்டல் பயன்பாட்டைக் குறைக்க உதவும் திட்டங்கள், உடல் செயல்பாடுகள் மற்றும் கலைகளில் ஈடுபாடு ஏற்படுத்தும் புதிய கற்றல் முறைகள், கிராமப்புறங்கள் உட்பட அனைத்து பகுதிகளிலும் திட்டங்களைப் பரப்பும் முயற்சிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.