உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  தேனீக்கள் கொட்டி முதியவர் பலி

 தேனீக்கள் கொட்டி முதியவர் பலி

அவலுார்பேட்டை: தேனீக்கள் கொட்டியதில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்ற முதியவர் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவலுார்பேட்டை அடுத்த கப்ளாம்பாடியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் வெங்கடேசன், 52; இவருக்கு சொந்தமான நிலத்தில் நேற்று முன்தினம் உளுந்து பயிர் அறுவடை நடந்தது. இந்நிலையில் மதியம், 1:00 மணிக்கு குளக்கரையில் இருந்த புளியமரத்திலிருந்து மலைத்தேனீக்கள் நிலத்திலிருந்த 5 பேரையும் கொட்டியது. காயமடைந்தவர்களை திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அனந்தபுரம், பனமலை பேட்டையை சேர்ந்த சின்னதம்பி மகன் ஏழுமலை, 75; பரிதாபமாக நேற்று காலையில் இறந்தார். காயம் அடைந்த கப்ளாம்பாடியை சேர்ந்த தங்கமணி, 80; பவுனம்மாள், 75; உமா, 50; வேல்முருகன், 58; ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவலுார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி