உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஓட்டுசாவடிகளை பிரிக்க தேர்தல் தனி தாசில்தார் ஆய்வு

ஓட்டுசாவடிகளை பிரிக்க தேர்தல் தனி தாசில்தார் ஆய்வு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் வாக்காளர்கள் அதிகம் உள்ள ஓட்டுசாவடிகளை பிரித்து புதிய மையம் அமைப்பது தொடர்பாக, தேர்தல் தனி தாசில்தார் ஆய்வு செய்தார்.விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில் 1200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள ஓட்டுசாவடிகளை பிரித்து தனியாக ஓட்டுசாவடி அமைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி நேற்று விக்கிரவாண்டி ஒன்றியம் வடகுச்சிபாளையம் கிராமத்தில் இரு ஓட்டுசாவடியில் அதிகமாக உள்ள வாக்காளர்களை பிரித்து புதிய ஓட்டுச்சாவடி மையம் அமைக்க தேர்தல் தனி தாசில்தார் பாரதிதாசன் ஆய்வு செய்தார். சித்தலம்பட்டு வருவாய் ஆய்வாளர் தேவசேனா, வி.ஏ.ஓ.,க்கள் ராமதாஸ், கிராம உதவியாளர் சதிஷ் அரவிந்தன், பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி