உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மின்வாரிய ஓய்வு பெற்றோர் மகளிர் பேரவை கூட்டம்

மின்வாரிய ஓய்வு பெற்றோர் மகளிர் பேரவை கூட்டம்

விழுப்புரம், ;விழுப்புரத்தில் மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மகளிர் சிறப்பு பேரவை கூட்டம் நடந்தது.கிளை தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பொற்கலை, வளர்மதி முன்னிலை வகித்தனர். கிளை செயலாளர் புருசோத்தமன், பொதுச்செயலாளர் சுப்பரமணியன் விளக்க உரையாற்றினர். மண்டல செயலாளர் வெங்கடாசலம், மாநில செயலாளர் சம்பத்ராவ், இணை செயலாளர் அன்பழகன உட்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில், பொதுத்துறை நிறுவனமான மின்வாரியத்தை தனியார் மயமாக்கும் அரசின் செயல் திட்டத்தை கைவிடவேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை