மேலும் செய்திகள்
மின் வாரிய குறைகேட்பு நாளை சிறப்பு முகாம்
04-Apr-2025
விழுப்புரம்; விழுப்புரம் மின் பகிர்மான வட்டத்தில் உள்ள விழுப்புரம், கண்டமங்கலம், செஞ்சி, திண்டிவனம் கோட்டங்களில் மின் நுகர்வோர்களின் குறைகேட்பு முகாம் நடந்தது.விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு, பவர்ஹவுஸ் சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் நடந்த முகாமிற்கு, தலைமை பொறியாளர் மணிமேகலை தலைமை தாங்கி மனுக்களை பெற்றார்.மேற்பார்வை பொறியாளர் நாகராஜ்குமார், செயற் பொறியாளர் நாகராஜன், உதவி செயற் பொறியாளர்கள் சுரேஷ்குமார், அண்ணாதுரை, பாக்யராஜ், கேசவன் உட்பட உதவி பொறியாளர்கள், இளமின் பொறியாளர்கள் பலர் பங்கேற்றனர்.முகாமில் மின் மீட்டர் பழுது, மீட்டர் மாற்றம், குறைந்த மின்னழுத்தத்தை சரிசெய்தல், மின் கட்டணம் தொடர்பான பிரச்னைகள், சேதமான மின் கம்பங்களை சரிசெய்தல் உள்ளிட்ட மனுக்கள் பெறப்பட்டது. இதில் 4 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 116 மனுக்கள் மீது விரைவில் தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
04-Apr-2025