உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்

மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைகேட்புக் கூட்டம் நடந்தது. மின்வாரிய செயற் பொறியாளர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, மின் மேற்பார்வை பொறியாளர் நாகராஜ்குமார் தலைமை தாங்கி, மின் நுகர்வோர்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். செயற்பொறியாளர் (பொறுப்பு) சுரேஷ்குமார், உதவி செயற்பொறியாளர்கள் கேசவன், பாக்யராஜ், புருஷோத்தமன், அண்ணாதுரை பங்கேற்றனர். கூட்டத்தில், விழுப்புரம் கோட்டத்திற்குட்பட்ட பல பகுதிகளைச் சேர்ந்த மின் நுகர்வோர்கள் பங்கேற்று, விவசாய மின் இணைப்பு, தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சரிசெய்தல், குறைந்தழுத்த மின்சாரம் சரிசெய்தல் தொடர்பாக கோரிக்கை மனுக்கள் அளித்தனர். மனுக்களை பெற்ற மேற்பார்வை பொறியாளர் நாகராஜ்குமார், இதன் மீது துரிதமாக தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !