உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தீயணைப்பு துறையினருக்கு அவசரகால பேரிடர் மீட்பு கருவி

தீயணைப்பு துறையினருக்கு அவசரகால பேரிடர் மீட்பு கருவி

விழுப்புரம்: விழுப்புரத்தில் ஆப்தமித்ரா திட்டத்தை மேம்படுத்துவதற்காக தீயணைப்புத் துறையினருக்கு அவசரகால பேரிடர் மீட்பு கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான், மாவட்ட தீயணைப்பு அலுவலரிடம் கருவிகளை வழங்கினார்.பின், கலெக்டர் கூறுகையில், 'விழுப்புரம் மாவட்டத்தில் பேரிடர் மீட்பு ஆப்தமித்ரா திட்டத்தை மேம்படுத்த 19 லட்சம் ரூபாய் மதிப்பில் 30 வகையான அவசரகால அத்தியாவசிய பேரிடர் மீட்பு கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டது.அதிலிருந்து, தனிப்பட்ட மிதக்கும் சாதனங்கள், டார்ச் மற்றும் அவசரகால விளக்குகள், பாதுகாப்பு கையுறைகள், நைலான் கயிறுகள், மீட்பு படகுகள், துடுப்புகள், நங்கூரங்கள், முதலுதவி பெட்டிகள், போர்வைகள், ரேடியோ வாக்கி செட்கள், பாதுகாப்பு கண்ணாடிகள், ஸ்ட்ரெச்சர் உட்பட பல்வேறு கருவிகள், தீயணைப்பு துறைக்கு வழங்கப்பட்டுள்ளது' என்றார்.நிழ்ச்சியில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் யோகஜோதி, ஆர்.டி.ஓ., முருகேசன், மாவட்ட தீயணைப்பு அலுவலர் பாஸ்கரன், பேரிடர் தனி தாசில்தார் ஆனந்தகுமார் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி