உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மகளிர் கல்லுாரியில் வேலைவாய்ப்பு முகாம்

மகளிர் கல்லுாரியில் வேலைவாய்ப்பு முகாம்

விழுப்புரம்: விழுப்புரம் தெய்வானை அம்மாள் கல்வியியல் கல்லுாரி, மகளிர் கல்லுாரி மற்றும் திருச்சி தமிழ்நாடு தனியார் ஆசிரியர் மன்றம் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரி வளாகத்தில் நடந்த வேலை வாய்ப்பு முகாமிற்கு, கல்வியியல் கல்லுாரி முதல்வர் முருகன் தலைமை தாங்கினார். பேராசிரியர் லாரன்ஸ் சிறப்புரையாற்றினார். விழுப்புரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 120 பேர் பங்கேற்று பயன்பெற்றனர். பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அதிகாரி சாய்குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !