நுழைவுத் தேர்வு பயிற்சி; விண்ணப்பம் வரவேற்பு
விழுப்புரம்; சென்னையில் தாட்கோ மற்றும் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் இணைந்து நடத்தும் அகில இந்திய நுழைவு தேர்வுக்கான பயிற்சியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு:தாட்கோ மற்றும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிறஇன மாணவர்களுக்கு, அகில இந்திய நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற பயிற்சி வழங்க உள்ளது.இப்பயிற்சி பெற பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணக்கு பாடங்களில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் 65 சதவீதமும், பிற இன மாணவர்கள் 75 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.குடும்ப வருமானம் ஆண்டுக்கு 4 லட்சம் ரூபாயக்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சி மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்பட உள்ளது.www.tahdco.comஎன்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்து, நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சென்னை மணலி ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் பாலிடெக்னிக் கல்லுாரியில் தங்கி பயிலலாம். உணவு மற்றும் தங்கும் இடத்திற்குக்கான கட்டணத் தொகையும் 11 மாதங்களுக்கு தங்கி பயில பயிற்சிக்கான தொகையினை பெட்ரோலியம் கார்ப்பரேஷனே ஏற்கும். இவ்வாறு, செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.