மேலும் செய்திகள்
பொறியியல் கல்லுாரியில் தேசிய அளவிலான கருத்தரங்கு
29-Mar-2025
விழுப்புரம் : விழுப்புரம் அரசு பொறியியல் கல்லுாரியில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறை மற்றும் வனத்துறை சார்பில் கருத்தரங்கம் நடந்தது.பசுமை இலக்குகள், திடமான வளர்ச்சிக்கு, கார்பன் சீராக்கத்திற்கும் வழியமைப்பது என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கிற்கு, கல்லுாரி முதல்வர் செந்தில் தலைமை தாங்கினார்.மின்னணு மற்றும் தகவல் தொடர்புத் துறை தலைவர் பெமினாசெல்வி வரவேற்றார். சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறை மாவட்ட பசுமை அலுவலர் பவித்ரா, விழுப்புரம் வனக்காப்பாளர் கமலக்கண்ணன், காலநிலை மாற்ற ஆலோசகர் ராகவ் சிறப்புரையாற்றினர். காலநிலை மாற்றத்தின் பின்னணி, வெளியீட்டின் கணக்கீடு குறித்த விளக்கினர். தொடர்ந்து மாணவர்களுடன், கலந்துரையாடல் நடந்தது. ஆசிரியர் ராமநாதன் நன்றி கூறினார்.
29-Mar-2025