மேலும் செய்திகள்
கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
12-Jun-2025
திண்டிவனம் : கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திண்டிவனம், சந்தைமேடு புறவழிச்சாலையில், இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான எட்டியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் முன் பகுதியில் பூட்டு போட்டு வைத்திருந்த உண்டியலை கடப்பாறையால் உடைத்து, அதில் இருந்த பணம், நகை உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் நேற்று முன்தினம் இரவில், திருடி சென்றனர். இதே கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன் அம்மன் கழுத்தில் கிடந்த 3 கிராம் தங்க தாலி திருடு போனது குறிப்பிடத்தக்கது.இது குறித்து கோவிலில் அறநிலையத்துறை ஆய்வாளர் தினேஷ் மற்றும் ரோஷணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
12-Jun-2025