| ADDED : மே 27, 2025 12:46 AM
முன்னாள் அமைச்சர் பொன்முடி அமைச்சர் பதவி மற்றும் கட்சியின் துணை பொதுச்செயலாளர் பதவியும் இல்லாத நிலையில் கட்சி நிகழ்ச்சி மற்றும் அரசு விழாக்களில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில், பொன்முடிக்கு ஆதரவாக அவரது விசுவாசிகள் முகநுால் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல்கள் பதிவு செய்து வருகின்றனர்.அதில், விழுப்புரத்திற்கு எண்ணற்ற சாதனைகளை செய்த பொன்முடியால், பயன்பெற்றவர்களே சிலர் அவரின் புகைப்படத்தை பேனர்களிலும், பெயரை சுவர் விளம்பரங்களிலும் மறைக்க முயற்சிக்கலாம். ஆனால், தலைவர் கருணாநிதி தலைமையில் இவர் விழுப்புரம் மக்களுக்கு செய்த சாதனைகளை யாராலும் மறக்க முடியாது. ஆயிரம் கைகள் கொண்டு மறைத்தாலும ஆதவன் மறைவதில்லை. பொன்முடி... இது வெறும் பெயர் அல்ல, விழுப்புரத்தின் அடையாளம். நிச்சயமாக மீண்டு(ம்) வருவார் எங்கள் பேராசிரியர் என அவர் செய்த சாதனைகளை பட்டியலிட்டு ஸ்டாலின் மற்றும் பொன்முடி உருவப்படத்தை டிசைன் செய்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர்.