மேல்வைலாமூர் பெரிய ஏரியில் உபரி நீர் வெளியேறி பயிர்கள் மூழ்கின
அவலுார்பேட்டை: மேல்வைலாமூர் கிராமத்தில் பெரிய ஏரி உபரிநீர் வெளியேறி 250 ஏக்கர் நெற்பயர்கள் மூழ்கின.மேல்மலையனுார் அடுத்த மேல்வைலாமூர் கிராமத்தில் 200 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பிலான பெரிய ஏரியில் நேற்று முன்தினம் பெய்த மழையினால் அதிகளவு உபரி நீர் வெளியேறியது.இந்த உபரி நீர் நாராணமங்கலம், கோட்டப்பூண்டி ஏரிகள் வழியாக மேல்மலையனுார் ஏரிக்கு சென்று கலக்கிறது.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, திடீரென ஏரி உபரி நீர் செல்லும் பகுதியில் உள்ள கற்களுடன் கூடிய இரும்பு தகடு பெயர்ந்தது.இதனால், தண்ணீர் அதிகளவு வெளியேறி , 250 ஏக்கருக்கும் மேற்பட்ட அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மூழ்கின.அதிகாரிகள் ஆய்வு செய்து, பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு நிவராணம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.