உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / புறவழிச் சாலையில் விரிவாக்க பணி

புறவழிச் சாலையில் விரிவாக்க பணி

திண்டிவனம்: திண்டிவனம் கல்லுாரி புறவழிச்சாலை சந்திப்பில் 2.82 கோடி ரூபாய் செலவில் சாலை விரிவு படுத்தும் பணி துவங்கியது.திண்டிவனம் - வந்தவாசி சாலையில் உள்ள பட்டணம் கிராம சந்திப்பில் உள்ள கல்லுாரி புறவழிச்சாலையில், ஏற்படும் விபத்துகளைத் தடுக்கும் பொருட்டு, சாலை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் சாலை விரிவாக்கப் பணிக்காக 2.82 கோடி ரூபாய் அரசு ஒதுக்கீடு செய்தது. இதற்கான பணி துவக்க விழா நடந்தது.மயிலம் எம்.எல்.ஏ., சிவக்குமார் பணியை துவக்கி வைத்தார். நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் கவிதா, உதவி பொறியாளர் தீனதயாளன், ஒப்பந்தாரர் குமார், ஒன்றிய கவுன்சிலர் சிலம்பரசன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ