கண் சிகிச்சை முகாம்
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் பழனிவேலு மெட்ரிக் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை மற்றும் விழுப்புரம் மாவட்ட பார்வை தடுப்பு சங்கம் சார்பில் நடந்த முகாமிற்கு, கண் சிகிச்சைப் பிரிவு நிர்வாக அலுவலர் அருள்குமார் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் வாசுகி முன்னிலை வகித்தார். பள்ளி தாளாளர் ராஜேந்திரன் முகாமை துவக்கி வைத்தார். அறங்காவலர் தேன்மொழி ராஜேந்திரன் வரவேற்றார். தொடர்ந்து மேல்வாலை, கீழ்வாலை, கண்டாச்சிபுரம், ஒடுவன்குப்பம், சித்தாத்துார் பகுதியிலிருந்து 120 பயனாளிகள் பயனடைந்தனர். 36 பயனாளிகள் மேல்சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பள்ளி மேலாளர் மஞ்சுளா நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஐ.டி.ஐ., மேலாளர் செல்லம்மாள் செய்திருந்தார்.