வாசகர்கள் கருத்துகள் ( 1 )
எவ்வளவு டீசல் விரயம், இதனை ஏழை விவசாயியின் வயல்களை உழவு செய்து தர உபயோகித்திருக்கலாம்
மேலும் செய்திகள்
கடலுாரில் டிராக்டர் பேரணி
27-Jan-2025
விழுப்புரம் : விழுப்புரத்தில் ஐக்கிய விவசாயிகள் சங்கத்தினர் டிராக்டர், இருசக்கர வாகனங்களில் பேரணியாக சென்றனர்.விழுப்புரம் நான்கு முனை சிக்னல் சந்திப்பிலிருந்து, நேற்று மாலை 4:30 மணிக்கு தொடங்கிய பேரணிக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். மா.கம்யூ., மாநில செயலாளர் சண்முகம் பேரணியை தொடங்கி வைத்தார்.விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பலர், டிராக்டர் மற்றும் இருசக்கர வாகனங்களுடன் கலந்து கொண்டனர். இப்பேரணி விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே நகராட்சி திடலில் முடிவடைந்தது.இந்த பேரணியில், இந்திய விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றக்கோரி, பஞ்சாப் எல்லையில் உண்ணாவிரதம் இருக்கும் தக்ஷித்தல்லேவாலின் உயிரை காப்பாற்ற அரசு தரப்பில் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும், விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கு உத்தரவாதம் கிடைக்க லோக்சபாவில் சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
எவ்வளவு டீசல் விரயம், இதனை ஏழை விவசாயியின் வயல்களை உழவு செய்து தர உபயோகித்திருக்கலாம்
27-Jan-2025