கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று காலை 11:30 மணிக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மாவட்ட அவை தலைவர் உலகநாதன், செயலாளர் சந்திரபிரபு ஆகியோர் தலைமையில் விவசாயிகள் 'திடீர்' முற்றுகையில் ஈடுபட்டனர். அங்கு, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்து, கோரிக்கைகள் குறித்து கலெக்டரிடம் மனு அளிக்க கூறினர். தொடர்ந்து விவசாயிகள், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து விட்டு கலைந்து சென்றனர். அந்த மனுவில், அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் விவசாயிகளுக்கு பயிர் கடன் உள்ளிட்ட அனைத்து கடன்களை வழங்க வேண்டும்; புதிய விவசாயிகளுக்கு கடன் வழங்குதல்; என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி உள்ளனர்.