மேலும் செய்திகள்
விழுப்புரத்தில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்
26-Dec-2024
விழுப்புரம்: விழுப்புரத்தில், வரும் 22ம் தேதி விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது.கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு: விழுப்புரம் கோட்ட அளவில், ஜனவரி மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், வரும் 22ம் தேதி நடக்கிறது. விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில், அன்று காலை 10:30 மணியளவில், ஆர்.டி.ஓ., முருகேசன் தலைமையில், குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில், விழுப்புரம், விக்கிரவாண்டி, வானுார், திருவெண்ணெய்நல்லுார், கண்டாச்சிபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட விவசாய சங்க பிரதிநிதிகளும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
26-Dec-2024