ஏரிகளை சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்
விழுப்புரம்: பெஞ்சல் புயலில் சேதமடைந்த ஏரிகளை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விழுப்புரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டக்குழு கூட்டம் நடந்தது. இந்திய கம்யூ., கட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் சகாபுதின் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் மாசிலாமணி பேசினார். இந்திய கம்யூ., மாவட்ட செயலர் சவுரிராஜன், மாநிலக்குழு உறுப்பினர் சரவணன், மாவட்ட துணை செயலர் பாலசுப்ரமணியன், மாவட்ட துணை தலைவர் ஏழுமலை, பொருளாளர் மணிகண்டன், துணை செயலர்கள் மூர்த்தி, ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்தில் 'பெஞ்சல்' புயலால் பல ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டு, அதன் கரைகள் மட்டும் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டன. இந்தாண்டு பருவமழை பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பு அவற்றை நிரந்தரமாக பலப்படுத்த வேண்டும்; மாவட்டத்தில் சவுக்கு அதிகளவு பயிரிடுவதால், விவசாயிகள் நஷ்டத்தை சந்திப்பதை தவிர்க்க, சவுக்கு அரவை தொழிற்சாலை அமைக்க வேண்டும்; என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.