உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / உழவர் நலத்துறை திட்ட துவக்க விழா

உழவர் நலத்துறை திட்ட துவக்க விழா

வானுார்: புதுக்குப்பம் கிராமத்தில் உழவரைத் தேடி வேளாண்மை -உழவர் நலத்துறை திட்டம் துவக்கி வைக்கப் பட்டது. வானுார் வேளாண்மை உதவி இயக்குநர் எத்திராஜ் வரவேற்று, சம்பா பருவத்திற்கு தேவையான நெல் ரகங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள், பூச்சி நோய் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார். நிகழ்ச்சிக்கு, புதுக்குப்பம் ஊராட்சி துணைத் தலைவர் கன்னியப்பன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளான மூர்த்தி, சீனிவாசன், தனுசு, சந்தோஷ் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் ராஜ்குமார் மற்றும் ஆத்மா திட்ட அலுவலர்கள் வாழ்வரசி, கோவிந்தசாமி, சந்திரசேகர் ஆகியோர் செய்திருந்தனர். துணை வேளாண்மை அலுவலர் செந்தில்குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !