உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம்

வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.விழுப்புரத்தில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு சிக்னல் அருகில் இருந்து ஊர்வலமாக சென்று நகராட்சி திடலில், ஒட்டுமொத்தமாக தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். மத்திய செயற்குழு உறுப்பினர் வெங்கடபதி வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் சங்கரலிங்கம் விளக்கவுரையாற்றினார். தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநில செயலாளர் புஷ்பகாந்தன், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் வள்ளல்பாரி, வருவாய் கிராம ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் ஆதிலட்சுமணன், நில அளவர் அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் மகேஸ்வரன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.இதில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நில அளவைத்துறை அனைத்து நிலை அலுவலர்களுக்கும் உரிய பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். வருவாய்த்துறை அலுவலர்களை தாக்கும் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க சிறப்பு பணி பாதுகாப்பு சட்டம் உட்பட 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சரவணன், செயலாளர் சிவக்குமார், சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் முருகன் நன்றி கூறினார். வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்த 1,672 பேர் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அரசு துறைகளில் பணிகள் பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை