பெண் மாயம்
விழுப்புரம்: பெண் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். விழுப்புரம், பாப்பான்குளம் பகுதியை சேர்ந்தவர் அப்துல்பாரி மகள் அபிபுனிஷா,27; இவர், வீட்டிலிருந்தே, ஐ.டி., நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த, 22ம் தேதி வீட்டில் வேலை செய்யாமல் இருந்த அவரை, அவரது தாயார் கண்டித்துள்ளார். இந்நிலையில், வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.