உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தீயணைப்பு மீட்பு பணி ஒத்திகை பயிற்சி

தீயணைப்பு மீட்பு பணி ஒத்திகை பயிற்சி

திருவெண்ணெய்நல்லுார்; தீயணைப்பு துறை மீட்பு பணிகள் ஒத்திகை பயிற்சி யில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பேரங்கியூர் ஏரியில் தீயணைப்பு துறை சார்பில் வடகிழக்கு பருவ மழை மீட்பு பணிகள் குறித்து ஒத்திகை பயிற்சி தீயணைப்பு நிலைய அலுவலர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. இந்த பயிற்சியில் தீயணைப்பு வீரர்கள் பல் வேறு உபகரணங்கள் மூலம் வெள்ள நீரில் சிக்கிக் கொண்டவர்களை மீட்பது, மீட்கப்பட்டவர்களு க்கு முதலுதவி அளிப்பது குறித்து செயல் விளக்கம் அளித்தனர். இதில் துணை வட்டாட்சியர் வேல்முருகன், ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி கிருஷ்ணமூர்த்தி, வி.ஏ.ஓ., பழனிவேல், ஒன்றிய கவுன்சிலர் விஸ்வநாதன், ஏரி பாசன தலைவர் ஜெயச்சந்திரன், அறங்காவலர் குழு தலைவர் வேணுகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !