நெசல் கிராமத்தில் முதலாம் ஆண்டு கிரிக்கெட் போட்டி துவக்கம்
வானுார்: நெசல் நியூ இளம் புயல் கிரிக்கெட் கிளப் நடத்தும் முதலாம் ஆண்டு கிரிக்கெட் போட்டியில் 16 அணிகள் பங்கேற்றுள்ளனர்.வானுார் அடுத்த நெசல் ஊராட்சியில், இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக நியூ இளம் புயல் கிரிக்கெட் கிளப் சார்பில், முதலாம் ஆண்டு கிரிக்கெட் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்போட்டியில், ஆலங்குப்பம், காலாப்பட்டு, கோட்டக்குப்பம், கிளியனுார், ரெட்டிச்சாவடி, அரியாங்குப்பம், நெசல் உள்ளிட்ட 16 அணிகள் பங்கேற்றுள்ளன.போட்டிகள் நாக் அவுட் முறையில் நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ. 12 ஆயிரம், சுழற்கோப்பை வழங்கப்பட உள்ளது. இரண்டாம் பரிசாக ரூ. 8 ஆயிரம், சுழற்கோப்பையும், மூன்றாம் பரிசாக ரூ.5 ஆயிரம் ரொக்கப்பரிசும், சுழற்கோப்பையும் வழங்கப்பட உள்ளது.மேலும், அனைத்து போட்டிகளிலும் ஆட்ட நாயகன் விருதும், இறுதிப்போட்டியில் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது வழங்கப்பட உள்ளது. போட்டிக்கான ஏற்பாடுகளை நெசல் நியூ இளம் புயல் கிரிக்கெட் கிளப் வீரர்கள் செய்துள்ளனர்.