மேலும் செய்திகள்
கோவில் உண்டியல் உடைத்து திருட்டு
11-Jul-2025
கோட்டக்குப்பம்: கோட்டக்குப்பம் அருகே இடத்தை அளக்க சென்ற அதிகாரிகளுக்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கேரள மாநிலத்தை சேர்ந்தவர் டேவிட். இவர் கோட்டக்குப்பம் அடுத்த நடுக்குப்பம் கடற்கரையோரம், ஒரு ஏக்கர் 46 சென்ட் இடத்திற்கு உரிமை கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். நீதிபதி, நிலத்தை அளந்து அறிக்கை தாக்கல் செய்ய வானுார் தாசில்தாருக்கு உத்தரவிட்டார். இந்நிலையில், நேற்று காலை சர்வேயர்கள் வெங்கடேசன், மணிகண்டன், கோட்டக்குப்பம் கிராம நிர்வாக அலுவலர் பவித்ரா உள்ளிட்டோர் போலீஸ் பாதுகாப்புடன் நிலத்தை அளக்க சென்றனர். அதற்கு மீனவ பஞ்சாயத்தார்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தாசில்தார் வித்யாதரன், கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து கோரிக்கைகளை மனுவாக அளிக்க தாசில்தார், மீனவப்பஞ்சாயத்திற்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து அதிகாரிகள் இடத்தை அளவீடு செய்யாமல் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
11-Jul-2025