வாசகர்கள் கருத்துகள் ( 1 )
செய்யும் விளம்பரம் ஸ்டண்ட் ஸ்டாலினிடம் எடுபடுமா பார்ப்போம்
திண்டிவனம்,: திண்டிவனம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னாள் முதல்வர் பழனிச்சாமி நிவாரண உதவிகளை வழங்கினார். பெஞ்சல் புயல் மற்றும் தொடர் மழையால் திண்டிவனம் பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதையொட்டி நேற்று மாலை திண்டிவனம் பகுதி, நாகலாபுரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னாள் முதல்வர் பழனிசாமி ஆறுதல் கூறி, அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார். இதில் முன்னாள் அமைச்சர் சண்முகம், கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுரு, எம்.எல்.ஏ.,க்கள் அர்ஜூனன், சக்கரபாணி, செந்தில்குமார், திண்டிவனம் நகர செயலாளர் தீனதயாளன், முன்னாள் நகர மன்ற தலைவர் வெங்கடேசன், மாநில ஜெ., பேரவை துணை செயலாளர் பாலசுந்தரம், நகர ஜெ., பேரவை செயலாளர் ரூபன்ராஜ், ஒன்றிய செயலாளர்கள் விஜயன், ரவிவர்மன், நடராஜன், பொதுக்குழு உறுப்பினர் தேவநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்யும் விளம்பரம் ஸ்டண்ட் ஸ்டாலினிடம் எடுபடுமா பார்ப்போம்