மாஜி முதல்வர் பிறந்தநாள் விழா நகர அ.தி.மு.க., கொண்டாட்டம்
விழுப்புரம் : விழுப்புரம் தெற்கு நகர அ.தி.மு.க., சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.விழுப்புரம் தெற்கு நகர அ.தி.மு.க., சார்பில், பழைய பஸ் நிலையம் அருகே நடந்த நிகழ்ச்சிக்கு, நகர செயலாளர் பசுபதி தலைமை தாங்கி, பொதுமக்கள் 300 பேருக்கு புத்தாடைகள் மற்றும் அன்னதானம் வழங்கினார்.நிகழ்ச்சியில், மாநில அண்ணா தொழிற்சங்கம் ஆவின் செல்வம், மருத்துவரணி செயலாளர் முத்தையன், வார்டு செயலாளர்கள் ஜியாவுதீன், பாஸ்கரன், ராம்குமார், ஜெயவேல், வர்த்தகரணி இணை செயலாளர் செந்தில்வேல், வழக்கறிஞர்கள் தமிழரசன், கலையரசன், நகர துணை செயலாளர் கலாமாலினி, பாசறை செயலாளர் நீலமேகம் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.