மாஜி ஊழியர் மாயம்
விழுப்புரம் : குடும்ப பிரச்னையால் மாயமான ஓய்வு பெற்ற அரசு ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம், மகாராஜபுரத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ், 67; ஓய்வு பெற்ற துணை வட்டார வளர்ச்சி அலுவலர். நேற்று முன்தினம், இவருக்கும், இவர் மனைவி சர்மிளாதேவிக்கும் குடும்ப பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டிலிருந்து வெளியே சென்ற மோகன்ராஜ் மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கும் தேடியும் கிடைக்கவில்லை. புகாரின்பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் மோகன்ராஜை தேடி வருகின்றனர்.