உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / முன்னாள் எம்.எல்.ஏ., புகழேந்தி நினைவேந்தல், சிலை திறப்பு விழா

முன்னாள் எம்.எல்.ஏ., புகழேந்தி நினைவேந்தல், சிலை திறப்பு விழா

விழுப்புரம்: முன்னாள் எம்.எல்.ஏ., புகழேந்தி முதலாம் ஆண்டு நினைவேந்தல் மற்றும் சிலை திறப்பு விழா நடந்தது.விழுப்புரம் அருகே அத்தியூர் திருவாதி கிராமத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, அமைச்சர் பொன்முடி தலைமை தாங்கி, மறைந்த விக்கிரவாண்டி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., புகழேந்தி சிலையை திறந்து வைத்து மலர் துாவி அஞ்சலி செலுத்தினார். தி.மு.க., கொள்கை பரப்பு செயலாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி., தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதமசிகாமணி, மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., அவை தலைவர் ஜெயச்சந்திரன், அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., இரங்கல் உரையாற்றினர்.மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் புஷ்பராஜ், நகர்மன்ற சேர்மன் தமிழ்செல்வி, துணை செயலாளர்கள் முருகன், கற்பகம், தயா இளந்திரையன், மாநில மகளிரணி பிரசாரக்குழு செயலாளர் தேன்மொழி, நகர செயலாளர்கள் சக்கரை, ஜீவா, விக்கிரவாண்டி ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை, காணை சேர்மன் கலைசெல்வி, பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம், துணை சேர்மன் பாலாஜி, ஒன்றிய செயலாளர்கள் வேம்பி ரவி, ரவிதுரை, ஜெயபால், நகர செயலாளர் நைனா முகமது, ஆவின் இயக்குனர் அரிகரன், நகர துணை செயலாளர் பொறியாளர் சுரேஷ்குமார், மாவட்ட கவுன்சிலர் மீனா வெங்கடேசன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் செல்வக்குமார், முன்னாள் ஒன்றிய சேர்மன் பிரசன்னதேவி செல்வக்குமார், கிருஷ்ணம்மாள் புகழேந்தி, ஒன்றிய கவுன்சிலர் வெற்றிசெல்வி தெய்வகணபதி, சாந்தி செந்தில்குமார், சுமதி அசோக் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டு இரங்கல் தெரிவித்தனர். இறுதியாக அமைச்சர் பொன்முடி தலைமையில் தி.மு.க., நிர்வாகிகள், புகழேந்தி குடும்பத்தினர் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ., புகழேந்திக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை