உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பள்ளி சிறுமியை சீரழித்த நான்கு வாலிபர்கள் கைது

பள்ளி சிறுமியை சீரழித்த நான்கு வாலிபர்கள் கைது

திண்டிவனம் : விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி, அதே பகுதி அரசு பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கிறார். மாணவிக்கு சமூக வலைதளம் வாயிலாக வாலிபர்கள் சிலருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில், வாலிபர்கள் மாணவியை தங்கள் காம வலையில் விழ வைத்து, பாலியல் பலாத்காரத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.கடந்த, 14ம் தேதி மாலை வீட்டிலிருந்து சிறுமி திடீரென மாயமானார். உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. மறுநாள் காலை, பட்டணம் அருகே சிறுமியை கண்டுபிடித்தனர்.அவரிடம் விசாரித்தபோது, நான்கு வாலிபர்களும் சேர்ந்து அழைத்துச் சென்றதும், நால்வரும் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரிந்தது. இது குறித்து, திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.போலீசார் விசாரணையில், ஊரல் கிராமத்தை சேர்ந்த தனசேகர், 19, அவரது அண்ணன் திருநாவுக்கரசு, 20, முரளி, 23, பிரகலாதன், 24, ஆகியோர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.தனசேகர் உள்ளிட்ட நான்கு பேர் மீதும், போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிந்து, அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை