உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இலவச பஸ் பாஸ் புதுப்பித்தல் முகாம் ரத்து

இலவச பஸ் பாஸ் புதுப்பித்தல் முகாம் ரத்து

விழுப்புரம் : விழுப்புரத்தில் மாற்று திறனாளிகளுக்கு இன்று நடைபெற இருந்த பஸ் பாஸ் புதுப்பித்தல் முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளது.கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் அரசு பஸ்களில் கட்டணமின்றி பயணம் செய்வதற்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த பயண அட்டையை, இந்தாண்டுக்கு புதுப்பிக்கும் முகாம் இன்று, 26 மற்றும் நாளை 27ம் தேதிகளில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெற இருந்தது. தற்போது, அந்த முகாம் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது.மேலும், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி வரும் 31.03.2025 வரை செல்லத்தக்க பஸ் பாஸ் அனைத்தும், வரும் 30.6.2025ம் தேதி வரை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து, அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.எனவே, நீடிப்பு காலம் வரை மாற்றுத்திறனாளிகள் பஸ்களில் பயணம் செய்யும் வகையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை