மேலும் செய்திகள்
காவலர், தீயணைப்பாளர் தேர்வுக்கு இலவச பயிற்சி
05-Sep-2025
விழுப்புரம் : வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஆசிரியர் தகுதி தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் துவங்கப்படவுள்ளது. கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக் குறிப்பு; விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில், ஆசிரியர் தகுதி தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் வரும் 29ம் தேதி காலை 10:00 மணி முதல் துவங்கப்பட வுள்ளது. இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்பும் நபர்கள் வரும் 27ம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகி பதிவு செய்துகொள்ள வேண்டும். மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
05-Sep-2025