உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இலவச கண் சிகிச்சை முகாம்

இலவச கண் சிகிச்சை முகாம்

திண்டிவனம் : ஜெயபுரம் தாகூர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் சிகி ச்சை முகாம் நடந்தது. திண்டிவனம் சர்வீஸ் லயன்ஸ் சங்கம், லயன்ஸ் சர்வீ ஸ் ட்ரஸ்ட் சார்பில் நடந்த முகாமிற்கு, சர்வீஸ் லயன்ஸ் சங்க தலைவர் கிருஷ்ணராஜ் தலைமை தாங்கினார். முகாம் துவக்க விழாவில், லயன்ஸ் சர்வீஸ் டிரஸ்ட் ஆனந்தகுமார் முத்துராஜ்குமார், வேளாண் அதிகாரி சரவணன், பள்ளி முதல்வர் ஜோதி தினகரன், லயன்ஸ் சர்வீஸ் டிரஸ்ட் தலைவர் ஆனந்த், நிர்வாகிகள் பங்கேற்றனர். முகாமில் 160 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட் டது. அதில் பார்வை குறைபாடு உள்ள 23 பேர் மேல் சிகிச்சைக்காக மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி