உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மகளிருக்கான இலவச சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி

மகளிருக்கான இலவச சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி

விக்கிரவாண்டி, ; விக்கிரவாண்டியில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் மகளிருக்கான இலவச சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை முன்னிலை வகித்தார். பி.டி.ஓ., பாலச்சந்திரன் வரவேற்றார்.மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி சத்ய நாராயணன் சட்ட விழிப்புணர்வு குறித்து விளக்க உரையாற்றினார்.பி.டி.ஓ., குலோத்துங்கன், வட்ட சட்டப் பணி கள் குழு வழக்கறிஞர்கள் வசந்தா, வீரவேல், முன்னாள் பஞ்., தலைவர் பழனியம்மாள், மகளிர் குமுத வள்ளி, ஒன்றியத்திலுள்ள அனைத்து மகளிர் குழு உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். நீதிமன்ற எழுத்தர் பேபி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ