உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / உணவு வணிகங்களுக்கு பரிசு கலெக்டர் அழைப்பு

உணவு வணிகங்களுக்கு பரிசு கலெக்டர் அழைப்பு

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் தகுதியான உணவு வணிகங்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் பரிசு பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு : உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை சார்பில், மாவட்ட அளவில் மீண்டும் மஞ்சப்பை திட்டம் மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத பொருட்களை கொண்டு பொட்டலமிடும் திட்டம் ஊக்குவிக்கப்படுகிறது. இதையொட்டி, மாவட்ட அளவில் ஒருமுறை பயன்படுத்த கூடிய பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்த மற்றும் சுற்றுசூழலுக்கு கேடு விளைவிக்காத பொருட்களை கொண்டு பொட்டலமிடும் உணவு வணிகங்களை மதிப்பெண் அடிப்படையில் மாவட்ட அளவிலான தேர்வுக்குழும உரிமம் பிரிவில் இரு உணவு வணிகங்கள், பதிவு சான்று ஆர்.சி., பிரிவில் இரு உணகவங்களையும் தேர்வு செய்து மாநில தேர்வு குழுவிற்கு பரிந்துரை செய்கிறது. இந்த குழு உரிமம் பிரிவில் ஒரு உணவு வணிகத்தை தேர்வு செய்து ரூ.1 லட்சம் ரூபாயும், பதிவு சான்று ஆர்.சி., பிரிவில் ஒரு உணவு வணிகத்தை தேர்வு செய்து ரூ.50 ஆயிரம் பரிசு தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர், உணவு பாதுகாப்பு துறை உரிமம், பதிவு சான்று, மேற்பார்வையாளர் பயிற்சி சான்று, உணவு கையாளுபவர்களுக்கு மருத்துவ சான்று, உறுதிமொழி, மூன்றாம் தணிக்கையாளரின் தணிக்கையில் மதிப்பெண் 110ல் 90க்கு மேல் பெற்றிருக்க வேண்டும். உணவு பாதுகாப்பு துறையின் சுகாதார மதிப்பீட்டு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். விழுப்புரம், கலெக்டர் அலுவலகம், அறை எண் 38, 2வது தளம், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை, மாவட்ட நியமன அலுவலர் அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பம் வழங்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை