உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு கல்லுாரி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்

அரசு கல்லுாரி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்

விழுப்புரம்; விழுப்புரம் அடுத்த அன்னியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவர்கள் சார்பில் கஞ்சா சாக்லேட் எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) அசோகன் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் அமைப்பு தலைவர் அரிய புத்திரன் முன்னிலை வகித்தார். பேராசிரியர் பாபு வரவேற்றார். பேராசிரியர் சின்னதுரை நோக்கவுரையாற்றினார். கஞ்சனுார் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் விழிப்புணர்வு ஊர்வலத்தை துவக்கி வைத்தார். இதில், கல்லுாரி மாணவர்கள் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வல மாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர். அப்போது, சப் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன், ஆசிரியர் கோவிந்தராஜ், பேராசிரியர்கள் மணவாளன், சுவாமிநாதன், சுமதி மற்றும் ரம்யா, ரேவதி, கிரிஷ்வர், ராசு, விஜயலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர். பேராசிரியர் ரங்கநாதன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !