உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சர்வதேச கராத்தே போட்டிக்கு தேர்வு; அரசு பள்ளி மாணவருக்கு பாராட்டு

சர்வதேச கராத்தே போட்டிக்கு தேர்வு; அரசு பள்ளி மாணவருக்கு பாராட்டு

விழுப்புரம்; மலேசியாவில் நடைபெற உள்ள சர்வதேச கராத்தே போட்டிக்கு, இந்திய அணி சார்பில் விளையாட தேர்வான, விழுப்புரம் நகராட்சி பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.விழுப்புரம் காமராஜர் நகராட்சி ஆண்கள் மேல்நிலை பள்ளி 7ம் வகுப்பு மாணவர் கார்த்திகேயன். கடந்த மாதம் பஞ்சாப் மாநிலத்தில் நடந்த தேசிய அளவிலான கராத்தே போட்டியில், 12 வயதுக்குட்பட்ட பிரிவில் தங்கம் வென்றார். இதனால், இந்திய அணிக்காக விளையாட தேர்வாகியுள்ளார்.சாதனை படைத்த மாணவர் கார்த்திகேயனை, பள்ளியில் தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன், உதவி தலைமை ஆசிரியர்கள் பன்னீர்செல்வம், ராஜேந்திரன், உடற்கல்வி இயக்குநர் மணிவண்ணன், உடற்கல்வி ஆசிரியர் பிரகாஷ், ராமன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.மாணவர் கார்த்திகேயன், பஞ்சாப் மாநிலத்தில் நடந்த போட்டியில் பங்கேற்றதற்கான செலவினங்களை, காமராஜ் நகராட்சி மேல்நிலை பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் சேர்ந்து 23 ஆயிரம் ரூபாயை வழங்கினர்.வரும் ஜூலை மாதம் மலேசியாவில் நடக்க உள்ள சர்வதேச கராத்தே போட்டியில் அவர் பங்கேற்க உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை