உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கிரானைட் கடத்தல் லாரி பறிமுதல்

கிரானைட் கடத்தல் லாரி பறிமுதல்

வானுார் : அனுமதியின்றி கிரானைட் கற்கள் கடத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். வானுார் சப் இன்ஸ்பெக்டர் சத்தியானந்தன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு ரங்கநாதபுரம் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மயிலம் பகுதியில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த டாராஸ் லாரியை நிறுத்தினர். லாரியை நிறுத்திய உடன் டிரைவர் தப்பியோடினார். அதை சோதனை செய்ததில், கிரானைட் கற்கள் எவ்வித ஆவணமும் இன்றி கடத்தி செல்வது தெரியவந்தது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து, தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை