உள்ளூர் செய்திகள்

 மயானக் கொள்ளை

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி, ரெட்டிக்குப்பம் ரோட்டில் குளக்கரை பகுதியில் அமைந்துள்ள வக்ரகாளியம்மன் கோவிலில் மயானக் கொள்ளை நடந்தது. அதனையொட்டி, நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. பின், தாய்வீட்டு சீதனம் எடுத்து வந்து மதியம் ரணகளிப்பு நடந்தது. அம்மன் காளிவேடம் தரித்து சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா புறப்பட்டு மாலை 6:00 மணிக்கு மயானம் சென்று கொள்ளையிடும் உற்சவம் நடந்தது. உற்சவத்தில் பக்தர்கள் காளி, குறத்தி வேடம் அணிந்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !