உள்ளூர் செய்திகள்

 மயானக் கொள்ளை

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அடுத்த டி.எடையார் அங்காளம்மன் கோவிலில் மயானக் கொள்ளை திருவிழா நடந்தது. அதையொட்டி கடந்த 6ம் தேதி செல்வவிநாயகர், பாலமுருகன், அம்பாள், பாவாடைராயன், சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனை செய்து காப்பு கட்டுதல் நடந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் காலை 11:00 மணியளவில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் கரகம் ஜோடித்து அம்பாள் அழைத்து வருதல் நிகழ்ச்சியும், இரவு சுவாமி வீதியுலா நடந்தது. தொடர்ந்து நேற்று மாலை 5:00 மணியளவில் ஆடு, கோழி படையலிட்டு மயான கொள்ளை புறப்படுதல் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை சர்வ சக்தி விஜி அம்மா மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை