உள்ளூர் செய்திகள்

குறைகேட்பு கூட்டம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 465 மனுக்கள் பெறப்பட்டது. விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடந்தது. பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, மனுதாரர்கள் முன்னிலையில் விசாரித்து, தொடர்புடைய துறை சார்ந்த அலுவலர்கள், மனுக்கள் மீது தீர்வு காண வேண்டும் என துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைபட்டா, ஆதரவற்றோர் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை, பட்டாமாறுதல், தொழில் கடனுதவி என்பது உட்பட பல்வேறு துறை சார்ந்த 465 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. டி.ஆர்.ஓ., அரிதாஸ், சப் கலெக்டர் முகுந்தன், பிற்பட்டோர் நல அலுவலர் தமிழரசன், ஆதிதிராவிடர் நல அலுவலர் வளர்மதி, மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகர் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ