மேலும் செய்திகள்
தொழிலாளர்கள் சங்க பொதுக்குழு
03-Aug-2025
விழுப்புரம் : தமிழக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை காப்பாளர் ஆசிரியர் சங்கத்தின் மாநில சிறப்பு செயற்குழு கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது. மா நில நிறுவன தலைவர் சகாதேவன் தலைமை தாங்கினார். செயல் தலைவர் முருகேசன், தலைவர் நாராயணசாமி முன்னிலை வகித்தனர். முதன்மை செயலாளர் மணிமொழி, பொதுச்செயலாளர் வேல்முருகன், பொருளாளர் பாலமுருகன் ஆகியோ ர் பேசினர். ஒருங்கிணைப்பாளர் கலியமூர்த்தி, மாவட்ட பொருளாளர் யுவராஜ், கடலுார் பொருளாளர் மாரியப்பன், மாநில துணை தலைவர் லாரன்ஸ் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை விடுதிகளில் சமையலர், காவலர், துாய்மை பணியாளர்களை வெளிமுகமை மூலம் தேர்வு செய்யாமல், முறையான காலம் வரை ஊதிய விகிதத்தில் நிரந்தர பணியிடங்களை உருவாக்கி அரசாணை பிறப்பிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட செயலாளர் பிராங்களின் நன்றி கூறினார்.
03-Aug-2025